நேற்று வியாழக்கிழமை பாகிஸ்தானிலும் இந்தியாவின் வடக்கு ராஜஸ்தான் மாநிலத்திலும் பெய்த கடுமையான மொன்சூன் மழையால் கடும் வெள்ளப் பெருக்குஏற்பட்டதுடன் மண் சரிவுகளும் நிகழ்ந்துள்ளன.
இதனால் பாகிஸ்தானில் மட்டும் உத்தியோகபூர்வமான தகவலாக 21 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வமைப்பு மேலும் தெரிவிக்கையில் காஷ்மீர் பகுதியிலுள்ள முஷ்ஷாஃபரபாட் நகரில் மிகப் பெரிய மண்சரிவு ஒன்று நிகழ்ந்திருப்பதாகவும் இதில் பல பொது மக்கள் சிக்கியிருப்பதாகவும் இவர்களை மீட்பதற்கு மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப், கிபெர் பக்துங்க்வா எனும் பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி என்பவற்றையே வெள்ளம் தாக்கியுள்ளது. இதில் நூற்றுக் கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் முக்கியமான சாலைகள் சில முடக்கப்பட்டும் கிட்டத்தட்ட 390 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் ராஜஸ்தானில் 4 நாட்களாகக் கடுமையாகப் பெய்து வந்த மழை காரணமாக நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதுடன் 20 பேர் மரணமடைந்தும் உள்ளனர். இதில் 10 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment