Saturday 16 June 2012

குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் - முதல்வர் அறிவிப்பு


முதல்வர் ஜெயலலிதா கர்நாடக மாநிலம் தண்ணீர் தராததால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள 12  மணி நேர கூடுதல் மின்சாரம் காவிரி டெல்டா பகுதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிற இடங்களில் மின்சாரம் வாங்குவதாகவும் அப்பொழுது தான் தேவையை சரி கட்ட முடியும் என்றும் முடிவு செய்துள்ளார். இதற்கு சிறப்பு நிதியாக ரூ 125 கூடி நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை  :
சென்ற ஆண்டு ஜூன் 6 அன்று டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பல புதிய இயந்திரங்களை கொண்டு விளைச்சலை மேற்கொண்டதால் அரிசியின் அளவு 75 .96 லட்சம்  மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அது மிக அதிக அளவாகும். ஆனால் 2010 & 2011 ஆண்டுகளில் 57.௯௨ லட்சம்  மெட்ரிக் டன் அளவு தான் கிட்டியது. இதை விட 2012 இல் சாகுபடி அதிகமாகும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் படி எந்த காலத்திலும் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடவில்லை. இதன் இறுதி தீர்ப்பு இன்னும் அறிவிக்காமலே இருப்பதால் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

கர்நாடக பகுதியில் உள்ள அணைத்து டாம்களும் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கபடுகிறது. அனால் இந்த ஜூன்
10.16 டி.எம்.சி. அடி தண்ணீர் தமிழகத்துக்கு கர்நாடகா தரவேண்டும். அனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரப்படவில்லை, பிரதமருக்கு கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.  மேட்டூர் அணையில் 41.11 டி.எம்.சி. அடி தண்ணீரே உள்ளதால் , இதை உபயோகம் செய்ய இயலாது. காவேரி டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 3.45 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டது. கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராத காரணத்தால், பெரும்பாலான விவசாயிகள் நாற்று விடும் பணியை இன்னமும் மேற்கொள்ளவில்லை. 

காவிரி டெல்டா பகுதிகளாக உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேட்டூர் அணையின் நீர் பெறப்படாததால் இங்கு 12  மணி நேர மின்சாரம் வழங்குமாறும், அப்போதுதான் நிலத்தடி நீரை பயன் படுத்த முடியும் என்றும் கூறினார். பகலில் 8 மணி நேரமும் இரவில் 4 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அப்பொழுது தான் அந்த குறுவை சாகுபடியை சமாளிக்கமுடியும் என்றும் அவர் வெளியிட்டுள்ளார். மின்சார பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது சிக்கல்களை குறைக்கும் எனவும் வருங்கால நெல் சாகுபடி குறித்த பிரச்சனைகள் தீர்வடையும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment