சென்னை : வேகமாக சென்ற பள்ளி பஸ் ஓட்டையிலிருந்து தவறி விழுந்து 2ம்
வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்
டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பள்ளி பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது. சென்னை
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர்
சேதுமாதவன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு
பிரனவ் (9), ஸ்ருதி (6) என்ற 2 குழந்தைகள்.
சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ருதி 2ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ருதி தினமும் வீட்டில் இருந்து தந்தையின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து பள்ளி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து அப்பாவின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தம் வந்த ஸ்ருதி, பின்னர் பள்ளி பஸ்சில் சென்றாள். மாலையில் வகுப்பு முடிந்த உடன் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பஸ்சில் 60 மாணவ, மாணவிகள் இருந்தனர்.
உள்ளே இருந்த மாணவிகள் தங்களுக்குள் சீட் மாறி விளையாடினர். அந்த பஸ்சின் நடுவில் பெரிய ஓட்டை இருந்தது. பஸ் சென்ற வேகத்தில், சிறுமி ஸ்ருதி நிலைதடுமாறி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உடல் நசுங்கி ஸ்ருதி இறந்தாள்.
.
இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து சாலையில் இருந்தோர் பதறினர். வேகமாக சென்ற பஸ்சை வழிமறித்து தடுத்து நிறுத்தி, டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். அப்படியும் ஆத்திரம் அடங்காமல், குழந்தைகள் அனைவரையும் இறக்கிவிட்டு, பஸ்சை தீவைத்துக் கொளுத்தினர். தகவல் அறிந்து தாம்பரம், பீர்க்கன்கரணை போலீசார் சம்பவ இடம் விரைந்து மாணவியின் சடலத்தை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பையை சேர்ந்த பஸ் டிரைவர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பள்ளி வாகனத்தின் உரிமையாளர் யோகேஷ்வரன், பள்ளி தாளாளர் விஜயன் ஆகிய இருவரையும் பிடித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தாம்பரத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து எரிந்து கொண்டிருந்த பஸ் தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் எரிந்து எலும்புக்கூடானது. பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வழியாக மாணவி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment