குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவைத் துவக்கி வைத்த நரேந்திர மோடி,
காற்றாடித் திருவிழா குஜராத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய விழாவாகும். இந்த விழாவில் மக்கள் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இப்படி காற்றாடி விடும் திருவிழாவை, சர்வதேச திருவிழாவாக கொண்டாட ஆரமிபித்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டனவாம். இந்த ஆண்டு 25 வது சர்வதேச காற்றாடித் திருவிழா கொண்டாட்டப் பட்டு வருகிறது. இந்த காற்றாடித் திருவிழா, ஒரு வாரம் வரை நடக்கும் என்றும் தெரிகிறது.
25 வது சர்வதேச காற்றாடித் திருவிழாவை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையில் நேற்று துவக்கி வைத்துப் பேசினார் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி. அப்போது, குஜராத்தில் பல ஆண்டுகளாக இந்த காற்றாடி திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதை ஒரு சம்பிரதாய விழாவாக மட்டுமே நடத்தி வந்தார்கள்.
இந்த திருவிழாவுக்கு சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது நான்தான். அதாவது இந்த காற்றாடி விடும் திருவிழாவை பிரபலப் படுத்தி உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து உள்ளேன். காற்றாடியைக் காட்டி உலகையே ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.
இந்த ஆண்டு காற்றாடித் திருவிழாவை சிறு நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் குஜராத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். இதனால் குஜராத் சுற்றுலாத்துறை சராசரியான 7 சதவிகிதத்தை விட, 16 சதவிகித வளர்ச்சியை குஜராத் சுற்றுலாத்துறை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. குஜராத்தில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் குஜராத் முழுவதும் இருக்கும் பரம ஏழைகள் கூட பலன் அடைவார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment