Saturday 16 June 2012

கோவைக்கு குடிநீர் ஆபத்து

சிறுவாணிக்கும் அட்டப்பாடிக்கும் நடுவே அணை கட்ட  முடிவு செய்துள்ளது கேரளா. இது அடுத்த முல்லைபெரியார் விவகாரம் போல தெரிகிறது என்று கூறப்படுகிறது. அதுதான் உண்மையும். இதில் நிறைய புரிந்து கொள்ளவேண்டியவை இருக்கிறது. சிறுவாணி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோவைக்கும் கேரளத்துக்கும் நடுவே உள்ளது. இது பிறப்பது கேரளாவில் தான் என்றாலும் , சிறு ஓடைகளின் மூலம் தமிழ் நாடு வந்தடைகிறது.

இந்நிலையில் , அட்டப்பாடி தொகுதியில் நின்று வென்ற ரமேஷ் சென்னிதலா அப்பகுதி மக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளார். என்னவென்று கேட்டால், சிறுவாணியில் இருந்து 20 கம் மேற்கில் அணை கட்டி அந்த குடிநீரை அட்டப்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு கொடுப்பதாகவும் தெரிவித்து கேரளா முதல்வருடன் கலந்து ஆலோசித்து இப்பணியை தொடங்கவுள்ளனர். இது குறித்து தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று கேரளா கூறியுள்ளது.

நாம் சிறுவாணி பகுதியை பற்றி ஆராய்ந்தால், இந்த திட்டம் எவ்வாறு தமிழகத்தை பாதிக்கும் என புரியும். சிறுவாணி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஆறு. அது கேரள மாநிலத்தில் உள்ள பட்டிவாசலில் தேக்கமாக உள்ளது, அங்கு சிறு சிறு ஓடைகள் சங்கமிப்பதையும் காணலாம். அதை தாண்டி, சில கிலோமீட்டர் தொலைவில் தான் அணை கட்ட போகிறது கேரளா. அங்கிருந்து அட்டப்பாடியை நோக்கி கட்டப்பட்டால், அங்குள்ள பவானி ஆறு தடுத்து நிறுத்த படுவதோடு தமிழ்நாட்டிற்குள் வராமலே போய்விடும். இதனால் பாதிப்படையும் இடங்கள், மேட்டுப்பாளையம், ஆலந்துறை, நரசிபுரம், அத்திக்கடவு மற்றும் காரமடை. இங்கு விவசாய நிலங்களும் வெகுவாக பாதிக்கப்படும். மேட்டுப்பலயதிளிரிந்து கிழக்கே வரும் பவானி ஆறு, கீழ் பாவானியாக ஈரோடு பகுதிக்கு செல்கிறது. இதுவும் ரத்தாகிவிடும். ஆகையால், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது உறுதி.

இதனை அரசு உடனடியாக கண்டுகொள்ள வேண்டும் இல்லை இன்னொரு முல்லைபெரியாறு விவகாரம் விரைவில் வெடிக்கும்.

No comments:

Post a Comment