Friday 15 June 2012

ஜனாதிபதி வேட்பாளர் யார்? இன்று மாலை தெரியும்

காங்கிரஸ் கட்சியில் குடியரசு தலைவருக்கான வேட்பாளர் யார் என்று முடிவு செய்வதில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சில தொகுப்புகள் டாக்டர் அப்துல் கலாம் தான் வேட்பாளராக போட்டியிட தயாராக உள்ளதாகவும் ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளன . இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை அம்பிகா சோனி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். அரசியல் விதிமுறைகள் அவருக்கு சரியாக தெரியவில்லை என்றும் அவர் கூறி உள்ளதாக செய்திகள் வெளியகயுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பா ஜ கா மூத்த தலைவர் அத்வானி உடன் கலந்து பேசி முடிவுகளை அறிவிப்பார் என தெரிகிறது. தி மு க தலைவர் டாக்டர் கலைஞரும் சோனியா காந்தி என்ன முடிவு செய்கிறாரோ அதை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு சோனியா காந்தி மாநில அளவிலான அழைப்பு அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.

இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனை நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இந்த கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பார் என்று தெரிய வருகிறது .

No comments:

Post a Comment