Friday 15 June 2012

நித்யானந்தாவும் மதுரை ஆதீனமும் !! - ஒரு அலசல்

நித்யனந்தாவை எல்லோருக்கும் நன்றாக தெரியும். பல சர்ச்சைகளை கிளப்பி நிறைய பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். அவர் பெயரில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது நமக்கு தெரியும் . அவரைப்பற்றி ஒரு அலசலை காணலாம்.

நித்யானந்தா பெங்களூரு பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கு சீடர்கள் தங்கி சேவை செய்து வந்தனர். அவரை சந்திப்பதற்கு பிரபலங்களும் வந்து சென்றனர். புகழின் உச்சத்தில் இருந்த அவர் திடீர் என சரிந்தது அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியால் தான். நடிகை ரஞ்சிதாவும் அதில் சம்மந்தபட்டிருந்தார். இருவரும் வலுவாக அந்த வீடியோ வை போலீ என்று கூறிவந்தாலும் , இறுதியில் நித்யனந்தாவின் சன்யாசி வேடம் கலைந்தது. நில மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள் என அவர் மேல் அடுக்கப்பட்டன. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் இப்பொழுது அவரை இளைய மதுரை ஆதீனமாக நியமானம் செய்துள்ளார் மதுரை ஆதீனம். ஆர்த்தி ராவ் என்ற பெண் வாய்த்த பாலியல் புகாரின் கீழ் நித்யாநந்தாவை தேடி வந்தனர் பெங்களூரு போலீசார்.  பொது மக்களுக்கு பாதகம் விளைவிப்பதால் அவரை ஒரு நாள் காவலில் வைக்க மாஜிஸ்த்ரேத் உத்தரவு பிறப்பித்தார். அவர் மைசூர் சிறையில் ஒரு நாள் அடைக்கப்பட்டார். ராமநகரம் கோர்ட்டில் சரணடைந்தார்.

இந்த கைது அரங்கேறியது நித்யானந்தா கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக ரூ 10 கோடிக்கு மான நஷ்ட வழக்கு தொடுத்ததற்கு. பிடதி ஆசிரமம் மூடப்பட்டு அங்குள்ள சீடர்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர். கர்நாடக அரசு சீல் வைத்து அங்கு ரெய்டு நடத்தி வருகிறது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறபடுகிறது. அவர் மைசூர் சிறையில் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதாகவும், தியானம் செய்து கொண்டு இருப்பதாகவும் சிறையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அவர் பெயரில் நில மோசடி வழக்குகள் நிறைய உள்ளன. அவை எதுவும் ஆதாரத்துடன் அவரை விட்டு  அகலவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

இது பற்றி அருணகிரிநாதர் கூறுகையில் தமக்கு நித்யானந்தா மீது எந்த விதமான சந்தேகம் ஏற்படவில்லை என்றும், அவரை இளைய ஆதீன பதவியிலிருந்து நீக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படி பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மேல் இருந்தாலும், அதெல்லாம் உண்மையாகாது என்றும் அவர் கூறியுள்ளார். எல்லாவற்றிலேர்ந்தும் நித்யானந்தா வெளியில் வந்து உண்மையை உரைப்பார் என்றும் மதுரை ஆதீனம் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள், அவர் நித்யானந்தாவின் சீடர்களால் சிறைபிடிக்க பட்டுள்ளார் என்று கூறுகின்றனர். அவரது கைபேசியும் இப்பொழுது நித்தியின் சீடர்கள் பரித்துகொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் வந்தபடி உள்ளன. ஆதீனம் மிகவும் உடல்நலம் குன்றியும் சோகமாகவும் இருப்பதாகவும் , ஒரு மிகபெரிய சிக்கலில் உள்ளதாகவும் அவருக்கு நெருங்கியோர் சொல்லிவருகின்றனர். அனால் அதை ஆம் என்றும் கூறாமலும் மறுக்காமலும் இருந்து வருகிறார் ஆதீனம். பஜனை நிகழ்ச்சி ஒன்றில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நித்யானந்தாவின் கூட்டாளிகள் நடந்து கொண்டதாக சோலை கண்ணன் கூறினார். அவர் வழக்கும் தொடுத்துள்ளார். அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தபோது , ஆதீனம் நித்தியின் சீடர்களிடம் சிக்கி ஒரு பொம்மைபோல் வாழ்கிறார். அவரின் தெளிவான மனநிலையும் பேச்சும் பறிபோயிற்று. இவரை காப்பாற்ற தமிழக அரசு முடிவு ஒன்றை விரைவில் எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நித்யானந்தாவின் தரப்பு முழுமையாக வெளியேறாததால் மதுரை அதீனத்திடம் இந்த குழப்பமா இல்லை வேறு எதாவது காரணங்கள் மறைந்துள்ளனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




No comments:

Post a Comment