Saturday, 16 June 2012

கல்லார் பழப்பண்ணையில் வனவிலங்குகள்



கோவையிலுள்ள கல்லார் , பழபண்ணையில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அங்கு பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும், அதுவும் பலாபழம் மிகவும் இனிப்பாக இருக்கும். அதற்க்கு தனிச்சுவை உண்டு. மிகவும் பிரபலம். அனால் வியாபாரிகளால் விற்க முடியாமலும், பயணிகளால் வாங்கமுடியாமலும் உள்ளது. அங்கு கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகளும் குரங்குகளும், அங்கு விளையும் பழங்களை ருசி பார்த்து வருகின்றன. எந்த விதமான பட்டசுகளுக்கோ மின்வேலிக்கோ துளியும் பயப்படாமல் அவை பழங்களை பறித்து தின்கின்றன. யானைகளோ மின்வேலியை உடைத்துக்கொண்டு இரவு நேரங்களில் கொத்தோடு பலாவை தும்பிக்கையில் எடுத்து காலால் மிதித்து பசியை போக்கி கொள்கின்றன. இங்கு ப்ரூன் பழ சீசனும் தொடங்கவுள்ளது.

அங்கு ஒரு கிலோ பலா ரூ 5 க்கு விற்பனை செய்யபடுகின்றது. 

கோவைக்கு குடிநீர் ஆபத்து

சிறுவாணிக்கும் அட்டப்பாடிக்கும் நடுவே அணை கட்ட  முடிவு செய்துள்ளது கேரளா. இது அடுத்த முல்லைபெரியார் விவகாரம் போல தெரிகிறது என்று கூறப்படுகிறது. அதுதான் உண்மையும். இதில் நிறைய புரிந்து கொள்ளவேண்டியவை இருக்கிறது. சிறுவாணி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோவைக்கும் கேரளத்துக்கும் நடுவே உள்ளது. இது பிறப்பது கேரளாவில் தான் என்றாலும் , சிறு ஓடைகளின் மூலம் தமிழ் நாடு வந்தடைகிறது.

இந்நிலையில் , அட்டப்பாடி தொகுதியில் நின்று வென்ற ரமேஷ் சென்னிதலா அப்பகுதி மக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளார். என்னவென்று கேட்டால், சிறுவாணியில் இருந்து 20 கம் மேற்கில் அணை கட்டி அந்த குடிநீரை அட்டப்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு கொடுப்பதாகவும் தெரிவித்து கேரளா முதல்வருடன் கலந்து ஆலோசித்து இப்பணியை தொடங்கவுள்ளனர். இது குறித்து தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று கேரளா கூறியுள்ளது.

நாம் சிறுவாணி பகுதியை பற்றி ஆராய்ந்தால், இந்த திட்டம் எவ்வாறு தமிழகத்தை பாதிக்கும் என புரியும். சிறுவாணி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஆறு. அது கேரள மாநிலத்தில் உள்ள பட்டிவாசலில் தேக்கமாக உள்ளது, அங்கு சிறு சிறு ஓடைகள் சங்கமிப்பதையும் காணலாம். அதை தாண்டி, சில கிலோமீட்டர் தொலைவில் தான் அணை கட்ட போகிறது கேரளா. அங்கிருந்து அட்டப்பாடியை நோக்கி கட்டப்பட்டால், அங்குள்ள பவானி ஆறு தடுத்து நிறுத்த படுவதோடு தமிழ்நாட்டிற்குள் வராமலே போய்விடும். இதனால் பாதிப்படையும் இடங்கள், மேட்டுப்பாளையம், ஆலந்துறை, நரசிபுரம், அத்திக்கடவு மற்றும் காரமடை. இங்கு விவசாய நிலங்களும் வெகுவாக பாதிக்கப்படும். மேட்டுப்பலயதிளிரிந்து கிழக்கே வரும் பவானி ஆறு, கீழ் பாவானியாக ஈரோடு பகுதிக்கு செல்கிறது. இதுவும் ரத்தாகிவிடும். ஆகையால், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது உறுதி.

இதனை அரசு உடனடியாக கண்டுகொள்ள வேண்டும் இல்லை இன்னொரு முல்லைபெரியாறு விவகாரம் விரைவில் வெடிக்கும்.

குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் - முதல்வர் அறிவிப்பு


முதல்வர் ஜெயலலிதா கர்நாடக மாநிலம் தண்ணீர் தராததால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள 12  மணி நேர கூடுதல் மின்சாரம் காவிரி டெல்டா பகுதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிற இடங்களில் மின்சாரம் வாங்குவதாகவும் அப்பொழுது தான் தேவையை சரி கட்ட முடியும் என்றும் முடிவு செய்துள்ளார். இதற்கு சிறப்பு நிதியாக ரூ 125 கூடி நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை  :
சென்ற ஆண்டு ஜூன் 6 அன்று டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பல புதிய இயந்திரங்களை கொண்டு விளைச்சலை மேற்கொண்டதால் அரிசியின் அளவு 75 .96 லட்சம்  மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அது மிக அதிக அளவாகும். ஆனால் 2010 & 2011 ஆண்டுகளில் 57.௯௨ லட்சம்  மெட்ரிக் டன் அளவு தான் கிட்டியது. இதை விட 2012 இல் சாகுபடி அதிகமாகும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் படி எந்த காலத்திலும் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடவில்லை. இதன் இறுதி தீர்ப்பு இன்னும் அறிவிக்காமலே இருப்பதால் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

கர்நாடக பகுதியில் உள்ள அணைத்து டாம்களும் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கபடுகிறது. அனால் இந்த ஜூன்
10.16 டி.எம்.சி. அடி தண்ணீர் தமிழகத்துக்கு கர்நாடகா தரவேண்டும். அனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரப்படவில்லை, பிரதமருக்கு கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.  மேட்டூர் அணையில் 41.11 டி.எம்.சி. அடி தண்ணீரே உள்ளதால் , இதை உபயோகம் செய்ய இயலாது. காவேரி டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 3.45 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டது. கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராத காரணத்தால், பெரும்பாலான விவசாயிகள் நாற்று விடும் பணியை இன்னமும் மேற்கொள்ளவில்லை. 

காவிரி டெல்டா பகுதிகளாக உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேட்டூர் அணையின் நீர் பெறப்படாததால் இங்கு 12  மணி நேர மின்சாரம் வழங்குமாறும், அப்போதுதான் நிலத்தடி நீரை பயன் படுத்த முடியும் என்றும் கூறினார். பகலில் 8 மணி நேரமும் இரவில் 4 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அப்பொழுது தான் அந்த குறுவை சாகுபடியை சமாளிக்கமுடியும் என்றும் அவர் வெளியிட்டுள்ளார். மின்சார பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது சிக்கல்களை குறைக்கும் எனவும் வருங்கால நெல் சாகுபடி குறித்த பிரச்சனைகள் தீர்வடையும் என்றும் தெரிகிறது.

Friday, 15 June 2012

ஏ டி எம்மில் புதிய மென்பொருள்

ஏ டி எம் ( தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரம் ) பணத்தை எங்கிருந்தும் எடுக்க மிகச்சிறந்த வழி. இது எளிமையான பயன்பாடு கொண்ட ஒரு இயந்திர வகை. ஆடோமடேட் என கூறப்படும் ஏ டி எம்கள் உள்ளே பணம் எடுக்க சில கேள்விகளை கேட்கும். ஏ டி எம் கார்டின் பின் நம்பர் அடித்தால் போதும் , எவ்வளவு பணம் எடுக்க வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கொள்ளலாம். அதை சரியாக நாம் குறிப்பிடவேண்டியது தான்.

அனால் இதிலும் பல முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஏ டி எம்மில் சில நேரங்களில் கார்டு மாடிகொள்ளும் அல்லது பணமே வெளியே வராது, அனால் வங்கி கணக்கில் பணம் குறைவது, ரசீது கிடைக்காமல் போவது  போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண புதியதொரு தொழில்நுட்பத்தை புகுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சில நேரங்களில் பின் நம்பரை என்டர் செய்த பின் , பணம் வராமல் போகலாம். பல மக்கள் பணம் மெசினில் இல்லை என்று நினைத்துகொண்டு போய்விடுவர். அனால், அடுத்த நபர் வந்து தனது பின்னை ஓபன் செய்தால் முந்தைய நபரின் பணம் இவருக்கு வரும். இது போன்ற இன்னல்களை தடுக்க வங்கி நிறுவனங்கள் சேர்ந்து ஒரு முடிவு செய்து புதிய மென்பொருளை செட் செய்துள்ளனர்.

அதாவது கார்டை உள்ளே செலுத்திவிட்டு, 6 நிமிடங்கள் மட்டுமே ஒருத்தருக்கு வழங்கப்படும். அதற்குள்ளே பணத்தை எடுக்கவில்லை என்றால் அந்த நடவடிக்கை ரத்தாகி விடும். இதன் மூலம் நாம் பெரிய அளவில் பணம் தேவையில்லாமல் வங்கி கணக்கிலிருந்து போவதை நன்றாக தடுக்கலாம். இதை பெரிய கிளைகளில் முதலில் அமல் படுத்திவிட்டு , பின்பு சிறிய ஏ டி எம் சென்டர்களில் கொண்டுவர முடிவு எடுக்க பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நித்யானந்தாவும் மதுரை ஆதீனமும் !! - ஒரு அலசல்

நித்யனந்தாவை எல்லோருக்கும் நன்றாக தெரியும். பல சர்ச்சைகளை கிளப்பி நிறைய பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். அவர் பெயரில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது நமக்கு தெரியும் . அவரைப்பற்றி ஒரு அலசலை காணலாம்.

நித்யானந்தா பெங்களூரு பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கு சீடர்கள் தங்கி சேவை செய்து வந்தனர். அவரை சந்திப்பதற்கு பிரபலங்களும் வந்து சென்றனர். புகழின் உச்சத்தில் இருந்த அவர் திடீர் என சரிந்தது அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியால் தான். நடிகை ரஞ்சிதாவும் அதில் சம்மந்தபட்டிருந்தார். இருவரும் வலுவாக அந்த வீடியோ வை போலீ என்று கூறிவந்தாலும் , இறுதியில் நித்யனந்தாவின் சன்யாசி வேடம் கலைந்தது. நில மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள் என அவர் மேல் அடுக்கப்பட்டன. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் இப்பொழுது அவரை இளைய மதுரை ஆதீனமாக நியமானம் செய்துள்ளார் மதுரை ஆதீனம். ஆர்த்தி ராவ் என்ற பெண் வாய்த்த பாலியல் புகாரின் கீழ் நித்யாநந்தாவை தேடி வந்தனர் பெங்களூரு போலீசார்.  பொது மக்களுக்கு பாதகம் விளைவிப்பதால் அவரை ஒரு நாள் காவலில் வைக்க மாஜிஸ்த்ரேத் உத்தரவு பிறப்பித்தார். அவர் மைசூர் சிறையில் ஒரு நாள் அடைக்கப்பட்டார். ராமநகரம் கோர்ட்டில் சரணடைந்தார்.

இந்த கைது அரங்கேறியது நித்யானந்தா கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக ரூ 10 கோடிக்கு மான நஷ்ட வழக்கு தொடுத்ததற்கு. பிடதி ஆசிரமம் மூடப்பட்டு அங்குள்ள சீடர்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர். கர்நாடக அரசு சீல் வைத்து அங்கு ரெய்டு நடத்தி வருகிறது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறபடுகிறது. அவர் மைசூர் சிறையில் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதாகவும், தியானம் செய்து கொண்டு இருப்பதாகவும் சிறையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அவர் பெயரில் நில மோசடி வழக்குகள் நிறைய உள்ளன. அவை எதுவும் ஆதாரத்துடன் அவரை விட்டு  அகலவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

இது பற்றி அருணகிரிநாதர் கூறுகையில் தமக்கு நித்யானந்தா மீது எந்த விதமான சந்தேகம் ஏற்படவில்லை என்றும், அவரை இளைய ஆதீன பதவியிலிருந்து நீக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படி பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மேல் இருந்தாலும், அதெல்லாம் உண்மையாகாது என்றும் அவர் கூறியுள்ளார். எல்லாவற்றிலேர்ந்தும் நித்யானந்தா வெளியில் வந்து உண்மையை உரைப்பார் என்றும் மதுரை ஆதீனம் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள், அவர் நித்யானந்தாவின் சீடர்களால் சிறைபிடிக்க பட்டுள்ளார் என்று கூறுகின்றனர். அவரது கைபேசியும் இப்பொழுது நித்தியின் சீடர்கள் பரித்துகொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் வந்தபடி உள்ளன. ஆதீனம் மிகவும் உடல்நலம் குன்றியும் சோகமாகவும் இருப்பதாகவும் , ஒரு மிகபெரிய சிக்கலில் உள்ளதாகவும் அவருக்கு நெருங்கியோர் சொல்லிவருகின்றனர். அனால் அதை ஆம் என்றும் கூறாமலும் மறுக்காமலும் இருந்து வருகிறார் ஆதீனம். பஜனை நிகழ்ச்சி ஒன்றில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நித்யானந்தாவின் கூட்டாளிகள் நடந்து கொண்டதாக சோலை கண்ணன் கூறினார். அவர் வழக்கும் தொடுத்துள்ளார். அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தபோது , ஆதீனம் நித்தியின் சீடர்களிடம் சிக்கி ஒரு பொம்மைபோல் வாழ்கிறார். அவரின் தெளிவான மனநிலையும் பேச்சும் பறிபோயிற்று. இவரை காப்பாற்ற தமிழக அரசு முடிவு ஒன்றை விரைவில் எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நித்யானந்தாவின் தரப்பு முழுமையாக வெளியேறாததால் மதுரை அதீனத்திடம் இந்த குழப்பமா இல்லை வேறு எதாவது காரணங்கள் மறைந்துள்ளனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




பவானிசாகர் அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி..

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பெருங்குடி விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் பகுதிக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார். இதை தெரிவித்தும் உள்ளார்.

இதனால் காளிங்கராயன் வாய்க்கால் அமைப்பின் கீழ் வரும் 15743 ஏக்கர் நிலம் பாசன பகுதி பெரும் என்பதை மகிழ்ச்ச்யுடன் கூறியுள்ளார்.

பிரணாப் ஜனாதிபதி ஆகிறார் !!!



நேற்று புது டில்லியில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் ஒருனித்த கருத்தாக பிரணாப் முகர்ஜி  ஜனாதிபதி வேட்பாளராக முடிவு செய்ய பட்டார் . இம்முடிவை நேற்று இரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்து சோனியா அறிவித்தார். 

பிரணாபை பற்றி :

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் ஆசிரியராக பணி செய்தவர். மிக கண்டிப்பாகவும் கட்டுகோப்பாகவும் எதிலும் இருக்க விரும்புவர். எதையும் பளிச்சென்று பேசிவிடுவார். நேர்மையும் ஒழுக்கமும் ஒருநிலையாக திகழ்பவர் பிரணாப் என எல்லோரும் கூறுவர். அறிவியல் வரலாறு போன்றவற்றில் மிகுந்த திறமை உடையவர். பல வரலாற்று நிகழ்வுகளை மிகசெரியாக தொகுப்பார். கூர்மையான நினைவாற்றலை கொண்டவர் , நடைமுறையில் எது சாத்தியம் என பார்த்து அணுகுவார்.

அரசியல் வாழ்க்கை :

இவரது தந்தை மேற்கு வங்காள மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராக இருந்தார். பிரணாபின் அரசியல் வாழ்க்கை 1969 இல் ராஜ்ய சபாவிலிருந்து தான் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 35 வருடங்கள் ராஜ்ய சபா எம் பியாக இருந்தார். பின்பு 1973  ஆம் ஆண்டு தொழில்துறை அமைச்சராக பணி புரிந்தார். 2 வருடங்கள் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக வேலை பார்த்துள்ளார். பற்பல துறைகளில் அமைச்சர் குழுக்களுக்கு தலைவராக இருந்துள்ளார். 87 -89 காங்கிரஸின் பொருளாதார ஆலோசனை பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

பிரணாபின் சாதனைகள் அரசியல் வாழ்விலும் நடைமுறையிலும் எண்ணற்றவை. அவருக்கு இருக்கும் வலுவான தகுதி அவரை வெற்றி காண வைக்கும் என நாம் அவரை வாழ்த்துவோம்.