Saturday, 14 July 2012
சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை கருணாநிதியின் குற்றசாட்டுக்கு தமிழக அரசு பதில்

சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றும் நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்துகொண்டிருக்கிறது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பட்டிருக்கிறது. அதோடு, 1851 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பில் இருப்பதாகவும்,மேலும் போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஏரிகளின் சீரமைப்புப் பணி, மற்றும், திருவள்ளூரில் புதிய நீர்தேக்க ஏரிகள் அமைக்கும் பணி நடப்பதாகவும், சோழவரம் ஏரியை ஆழப் படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை
ஜகதீஷ் ஷட்டர் நேற்று புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டபின்னும்,
கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. உடுப்பி மாவட்ட எம் எல் ஏ, ஸ்ரீனிவாச ஷெட்டி மூலம் மேலும் குழப்பம் நீடிப்பதாகத் தெரிகிறது.
ஜகதீஷ் ஷட்டர், முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டபின், ஸ்ரீனிவாச ஷெட்டிக்கு, மந்திரி பதவி கொடுப்பதாக தலைமை பாஜக அறிவித்திருந்ததாகவும், ஆனால், புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகள் பட்டியலில் ஸ்ரீனிவாச ஷெட்டியின் பெயர் வாசிக்கப் படவில்லை என்று தெரிந்ததுமே, ஷெட்டி கதறி அழுதுவிட்டதாகவும் தெரிகிறது.
தனது தொகுதியில் நலத்திட்டங்களை நல்லபடியாக செய்து வந்ததால்தான், தான் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், அப்படிப்பட்ட தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை, எப்படி நான் எனது தொகுதி மக்களின் முகத்தில் விழிப்பேன் எனக் கூறி, ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டுத்தான் திரும்ப ஊருக்கு செல்வேன் என்றும் ஸ்ரீனிவாச ஷெட்டி காத்திருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், ஸ்ரீனிவாச ஷெட்டி தொகுதி மக்கள் நேற்று முதலே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் கடை அடைப்பு போன்ற எதிர்ப்புக்கள் இன்று நடந்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும் இவரைப்போலவே குமாரசாமி எம் எல் ஏ போன்ற 4 எம் எல் ஏ க்கள் தங்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று கூறி, தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆளுனரை சந்திக்க காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Saturday, 7 July 2012
இந்தியாவின் எப்பகுதியிலும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது : ஜெயலலிதா
இலங்கைவ் விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும்
தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை
வலியுறுத்தியுள்ளார்.
தாம்பர விமானநிலையத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப்படை வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும், அவர்கள் விமானம் மூலம் பெங்களூரின் எலகங்கா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு பயிற்சி தொடரவிருப்பதாகவும் தகவல் முரண்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள ஜெயலலிதா மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது வாய் மூடி மவுனியாக உள்ள மத்திய அரசு தமிழக மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இலங்கை நாட்டின் ஒன்பது விமானப்படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத காலம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை 5.7.2012 அன்று தெரிவித்து இருந்தேன்.
தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் இது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்றும் நான் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தன.
தமிழர்களுக்காகவே பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு தலைவர் ''அந்தச்செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும்'', என்று இது குறித்து பட்டும் படாமலும், வெறும் வாய் வார்த்தையாக பதில் அளித்து இருக்கிறார்.
எனினும், இலங்கை நாட்டின் விமானப்படை வீரர்களுக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு, இலங்கையின் ஒன்பது விமானப்படை வீரர்களையும் பெங்களூரூவிலுள்ள எலகங்கா விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 6.7.2012 அன்று விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சாதகமாக தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் ஆகும். இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

Friday, 6 July 2012
தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது

தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது.
இதில் 2010ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்யவுள்ளதுடன், இன்னும் பல முக்கிய முடிவுகள் குறித்தும், முக்கிய மசோதாக்கள் பற்றியும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக, பின்தங்கிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படலாம் எனவும், ஏற்கனவே தேசிய ஆலோசனை குழு சமர்பித்திருக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்படலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முறைசாராத் தொழில் செய்பவர்கள், மற்றும் சாலையோரக் கடைகள் வைத்திருப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் இவர்களுக்கு ஓய்வூதியத்துடன் காப்பீட்டுத் திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும், மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற பலமுக்கிய விஷயங்களும் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன
Sunday, 17 June 2012
தனியாரிடம் இருந்து மின்சாரம் பெற்றால் மேலும் கட்டணம் உயருமா ??
மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு
தனியார் நிருவனகளில் இருந்து மின்சாரம் பெற முடிவு செய்துள்ளது, இந்த முடிவால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நஷ்டம் அதிகம் ஏற்படும். இந்த
நஷ்டத்தை சரிகட்ட சில மடங்குகள் கட்டணத்தை உயர்த்திவிட்டால் , பயனர்களுக்கு இது மேலும் பெரிய சுமையாக அமைந்து விடும்.
இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பது தான் உண்மை.
11000 மெகாவாட் தேவை அனால் 8000 வாட் மட்டுமே உற்பத்தி ஆகின்றது. 2500 மெகாவாட் பற்றாக்குறை நீடித்து வருகிறது. அனால் , பல இடங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி விட்டதால், மழை ஏமாற்றினாலும், காற்று நன்றாக வீச தொடங்கி உள்ளது. அதிலிருந்து மின்சாரம் சுமார் 3000 மெகாவாட் வரை கிடைப்பதால் இப்பொழுது சில இடங்கள் மின் வெட்டு நேரங்களை கம்மியாக சந்திக்கின்றன.
சில இடங்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், வெளி மாநிலங்களிடம் இருந்தும், மின் வாரியம் வாங்கி வருகிறது,.
இப்போது 2012-13-ம் ஆண்டு மின் தேவையைக் காரணம் காட்டி வெளி மாநிலங்களிலிருந்து 1,079.8 மெகாவாட், தமிழகத்தைச் சேர்ந்த பிற தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 683.3 மெகாவாட், ஒப்பந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து 420 மெகாவாட் என மொத்தம் 2,183.1 மெகா வாட் மின்சாரத்தை ரூ.13,175 கோடிக்கு வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது.
பல வெளிமாநில மின்சார வாரியங்கள், எல்லை பகுதிகளில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ 4 க்கு விற்க முன்வந்துள்ளனர். அனால் தனியார் நிறுவனங்கள் ரூ 6 க்கு விற்கின்றன.
தனியார் நிறுவனங்கள் கோரியபடி 683.3 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 6.30 என்ற விகிதத்தில் வாங்கினால், அவர்களுக்கு மின் வாரியம் ரூ.4304.79 கோடி கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த மின்சாரம் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் மின் இழப்பையும் கணக்கிட்டால், இந்த 683.3 மெகாவாட் மின்சாரத்தின் விலை பயனீட்டாளர்கள் முனையில் ரூ.7,662.53 கோடியாக உயரும்.
மின்சார திட்டங்கள் பல தொடங்கபடாமல் உள்ளதால், மின் உற்பத்தி செய்யபடாமல் உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், மேட்டூரில் தொடங்க வேண்டிய மின்சார உற்பத்தி 600 வாட் கொடுக்கும் இந்த ஜூன் இல் என எதிர்பார்த்தது, அனால் அது செப்டெம்பரில் தான் தொடங்கும் என தெரிகிறது.
மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டு இருக்கிறது. இல்லையேல், வாங்கும் மின்சாரத்திற்கு கட்டணம் உயர்ந்தால், பயனர்கள் மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியாமல் திணறிபோய் விடுவார்கள்.

ஸ்டெம் செல் சிகிச்சை
ஸ்டெம் செல் என்னும் முறையின் மூலம் பல சிகிச்சைகள் வெற்றி
பெற்று வருகின்றன. சுசித்ரா ஹோல்கர்சன் என்ற ஒரு மருத்துவர் சுவீடன் நாட்டு
சிறுமியின் ரத்த நாளத்தை வளர்த்து அதை பொருத்தி சிகிச்சையை வெற்றி பெற
செய்துள்ளார். உறுப்புமாற்று சிகிச்சை செய்வதில் இவர் மிகவும் அனுபவம்
உடையவர்.
பத்து வயது சுவீடன் நாட்டு சிறுமிக்கு கல்லீரலின் ரத்த நாளங்கள் நாசமானதால், அவருக்கு ரத்தநாளங்களை புதிதாக பொருத்தும் எண்ணம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. சிறுமியின் உடலில் இருந்தே நாளங்களை எடுத்தால் பருவ வளர்ச்சி செரியாக ஏற்படாமல் போகலாம் என கருதி உறுப்புகளை தானம் செய்தவரின் உடலில் இருந்தே நாளங்களை எடுத்து அந்த செல்களை அகற்றிவிட்டு இந்த சிறுமியின் உடலுக்கு ஏற்றாற்போல் அதனை வடிவமைத்து அடை காக்கும் கருவியின் மூலம் அதனை வளர்த்து சிறுமியின் உடலில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பொருத்தினர். அவர் இப்பொழுது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அனால் இந்தியாவில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மிக மிக குறைவு. நிறைய மருத்துவர்களுக்கு அதைப்பற்றி சரியான கண்ணோட்டம் இல்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏற்றார் போல் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அதற்கு தேவையான வசதிகள், படிப்பு மற்றும் கருவிகள் இந்தியாவில் இன்னும் கேள்விக்குறியாக தான் உள்ளது. குழந்தைகளின் ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். பல ரத்த வங்கிகள் இதை பணம் வாங்கிகொண்டு செய்கின்றன. அதை இன்கிபடோரில் வைத்து அந்த ரத்ததை காத்து ஸ்டெம் செல்களையும் காக்கின்றனர்.
அனால் மருத்துவ கவுன்சிலின் படி எந்த தெளிவான முடிவும் இப்பொழுது செரியாக எடுக்கப்படவில்லை. சில நேரங்களில் தொப்புள்கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தநாளங்கள் கேட்டு போய்விடுங்கின்றன. இதை தடுக்க வேண்டும் , அப்படி நடந்துவிட்டால் அதனை சரி செய்வதற்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அரசு முடிவு செய்ய வேண்டும்.
இந்த ஸ்டெம் செல் சிகிச்சை நல்லதொரு வரம் இந்த மனிதகுலத்திற்கு. இதனை மிகுந்த பொறுப்புடனும் , கடமையுடனும் மருத்துவர்களும், ரத்த வங்கிகளும் ஏற்று சரியாக செய்ய வேண்டும் என்பது இந்த சிகிச்சைக்கு வைக்கப்படும் முக்கியமான நிபந்தனை.

Subscribe to:
Posts (Atom)