அவரை ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரமாண்டமாக வரவேற்றனர்.
இதனிடையே காலை தொடங்கி இரவு வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், பழனி முருகன் கோவிலில் தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதின் படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
இதனிடையே ஸ்ரீரங்கத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி மேலூரில் 10 எக்டேர் பரப்பளவில் ரூ.8.67 கோடி மதிப்பில் அமைய உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கம்- திருவானைக்காவல் பாதாள சாக்கடை திட்டம், ஸ்ரீரங்கம் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதனுடன் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி, திருச்சி, ஸ்ரீரங்கம் நகரங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்ததுடன் திருச்சி விமான நிலையம் முதல் ஸ்ரீரங்கம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் இருந்தது.
கூடங்குளம்
அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க கோரி
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகள்
நிராகரித்துள்ளனர்.
சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்துத் தொடர்பாக போலீசார் 12பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிகிறது.